இனிமேட்டு குளியல்தான் தோஸ்த்து

கிண்டி என்சினியரிங் காலேஜ் நண்பன் காம்ளி என்ற கமல குமார் அடிக்கடி ஞாபகத்திற்கு வருவான். நானும் அவனும் முதல் 2 வருடங்களில் ரூம் மேட்ஸ். அதில் தொடங்கி கடைசியில் ப்ராஜக்ட செய்ததுவரை நெருங்கிய நட்பு தொடர்ந்தது. (கடைசி ப்ராஜக்டில் ஏனோ நான் என்னையே Project Manager ஆக promotion செய்து கொண்டுவிட்டேன். கோடில் கை வைக்கைவே இல்லை.. அதை காம்ளி இன்னும் மறந்திருக்க மாட்டானோ என்று ஒரு சின்ன பதட்டம் இன்னும் இருக்கிறது.. அது வேறு விஷயம்)

நிறைய விஷயங்களில் காம்ளியோடு என்னால் relate செய்துகொள்வது போல் இருக்கும். முதலாண்டில், 'கல்லூரியில் எல்லாம் ஒரே ஆங்கிலம்தான்' என்ற பீதியோடு 'தமிழ் மீடியம் படிச்சா இப்டிதான்.. காலேஜ் வந்து கஷ்டப்படனும்' என்றேன்; அதற்கு காம்ளி 'English மீடியம் படிச்சாலும் அப்டிதான் தோஸ்த்து' என்று விளக்கினான்.

காம்ளியின் இந்த tag line ரொம்ப பாப்புலராக இருந்தது.. "இனிமேட்டு ____ தான் தோஸ்து". அந்த டாஷில் வேறு வேறு விஷயங்கள் வந்து போய்க்கொண்டே இருக்கும். அன்று Computer Architecture வந்தது. 'ச்சே. கவுந்திருச்சே' என்றபடி 'காம்ளி நீ எவ்வளவுடா?' என்றேன்.. 'தோஸ்து, கேக்கவே கேக்காதே..' என்று சொல்லிவிட்டு ஒரு நீண்ட மூச்சுவிட்டபடியே 'இனிமேட்டு Computer Architecture தான் தோஸ்த்து' என்றான். அதற்கு அர்த்தம் Computer Architecture ல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என்று அர்த்தம். அதைக்கேட்டால் நமக்கும் ஒரு செயல்வேகம் வரும். (ஆனால் இப்பிடி ஒவ்வொரு பாடத்திற்குமே 'இனிமேட்டு..' வசனத்தை சொல்லி சொல்லி அதற்கு பவர் குறைந்துவிடும். அதுதான் பிரச்சனை)

ஆனால், இன்றைக்கும் அவ்வப்போது பல விஷயங்களுக்கு 'இனிமேட்டு.. ' வசனம் மனதில் வந்து போகும்போதேல்லாம், மனதுக்கு ஒரு தெம்பு வரத்தான் செய்கிறது. பல மாதங்களாகவே, 'ச்சே என்னா யோகா பண்ணினாலும் evening இவ்வளவு tired ஆகிவிடுகிறதே' என்று அடிக்கடி குறைபட்டுக்கொள்வேன்.. ஆனால், இன்னிக்குதான் ஒன்று புரிந்தது.. மாலையில் இன்னோரு 'ஜில் குளியல் போட்டால்' செம எனர்ஜி வந்துவிடுகிறது.. 'ஆஹா இனிமேட்டு குளியல்தான் தோஸ்து' என்று சொன்னபடியே இந்த blog கை தட்டதுவங்கினேன்.

--
பின் குறிப்பு: காம்ளி நம்பர் என் செல்பேசியில் தான் இருக்கிறது. இருந்தும் நான் அவனிடம் பேசி 4 வருடங்கள் இருக்கும். அதற்கு முன்னால் ஒரு 4 நிமிடம் பேசியிருப்போம், நான் பெங்களூர் வந்த புதிதில். அதற்கு முன்னால் ஒரு 5 வருட்ம் பேசவில்லை, நான் USல் இருந்தபோது. காம்ளிக்கு இரண்டு குழந்தைகள் இப்போது. 2ம் பசங்க தான்னு நினைக்கிறேன். 'ச்சே.. Friend கிட்ட Phone பேசக்கூட time ஒதுக்க முடியல. ம்ம் ம்ம்.. இனிமேட்டு Phone call தான் தோஸ்து' என்று மனதுக்குள் இப்போ ஒரு சவுண்டு வந்தது.

Comments

Alex , is it kamalakumar from aruppukottai

Popular Posts